By February 24, 20180 CommentsReport

மார்ச் 2 முதல் படங்கள் ரிலீஸ் இல்லை..!!

கியூப் நிறுவனத்துடனான பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து மார்ச் 2ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்ததில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் படங்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்யும் கியூப், யூ.எஃப்.ஒ நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதாகத் தயாரிப்பாளர்களிடையே அதிருப்தி நிலவியது. புதிய நிறுவனங்கள் குறைந்த விலையில் படங்களை ஒளிபரப்பத் தயாராக உள்ளதால் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த அனைத்துத் தயாரிப்பாளர்கள் அமைப்புகளும் கட்டணக் குறைப்பு செய்ய வலியுறுத்திப் பேச்சுவார்த்தைகள் நடத்தின. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கியூப் நிறுவனத்தோடு இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்பெறவில்லை.

மூன்றாம் முறையாக பெங்களூருவில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 15% கட்டணத்தைக் குறைத்துக்கொள்வதாக ஏற்கனவே கூறியிருந்த நிலையில் 9% மட்டுமே குறைக்க முடியும் என கியூப் நிறுவனம் பின்வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது மார்ச் 2 வெள்ளி முதல் எந்தப் புதிய படத்தையும் வெளியிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*