By February 24, 20180 CommentsReport

குறும்படம் தந்த அங்கீகாரம்: தன்ஷிகா..!!

சினம் குறும்படத்தில் விலைமாதுவாக நடித்த தன்ஷிகா சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் தன்ஷிகா விலைமாதுவாக நடித்த ‘சினம்’ என்ற குறும்படம் கொல்கத்தா திரைப்பட விழாவில் 8 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது.

ஆவணப்பட இயக்குநரான பெங்காலி நடிகை பிடிட்டா பேக் தன்ஷிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனந்த் மூர்த்தி இயக்கியிருக்கும் இப்படத்தை லண்டனில் வசிக்கும் நேசன் திருநேசன் தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கலாச்சார ரீதியில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகப் படத்தை சினிமா விமர்சகர்கள் பாராட்டிவருகின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து மேற்கு வங்கத்துக்குப் பிழைக்கச் சென்று அங்கு பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு பெண்ணின் கதையாக ‘சினம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. 25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தக் குறும்படத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் கலாச்சாரத் திரைப்பட விழாவில் 100க்கும் மேற்பட்ட படங்கள் இடம்பெற்றன.

சிறந்த நடிகையாக தன்ஷிகா, துணை நடிகையாக இந்த படத்தில் நடித்த பத்திதா என ‘சினம்’ படம் 8 விருதுகளைப் பெற்றுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*