By February 25, 20180 CommentsReport

வதந்திகள் பற்றி கவலைப்படமாட்டேன் – டாப்சி..!!

நடிகை டாப்சி தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா-2 என்று தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்தும் தற்போது அவருக்கு கைவசம் படங்கள் இல்லை. இதனால் இந்திக்கு போய் விட்டார். அங்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. இந்தியில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் ரன்னிங் சாதி டாட்காம், நாம் ஷபானா, ஜாத்வா-2 ஆகிய படங்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது தில் ஜூங்ளி, தட்கா, முல்க், மன்மர்சியான்,சூர்மா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் கலகலப்பாக பழகுவார். இதை வைத்து அவரைப்பற்றி அடிக்கடி வதந்திகள் பரவுகின்றன. இது பற்றி கூறியுள்ள டாப்சி, “ வதந்திகள் பற்றி நான் கவலைப்படமாட்டேன். அதற்காக நடிகர்களுடன் நட்பை முறித்துக்கொள்ள மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*