By February 26, 20180 CommentsReport

விஷாலுக்கு அமெரிக்காவில் சிகிச்சை..!!

Actor Vishal @ Rayudu Press Meet Stills

நடிகர் விஷால் அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் என இரண்டு பொறுப்புகளைக் கவனித்து வருவதோடு சினிமாவையும் விட்டுவிடாமல் தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்துவருகிறார் விஷால்.

இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் மாறுகண் கேரக்டரில் விஷால் நடித்ததால் அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. மேலும், மிஷ்கின் இயக்கத்தில், ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்தபோது தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டார்.

இதற்கிடையே விஷால், ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோது தலைவலி அதிகமானதால், டெல்லி தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவர் மூட்டுவலியாலும் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஷால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மூட்டுவலி மற்றும் தலைவலிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்ததும் விரைவில் சென்னை திரும்ப இருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*