By February 26, 20180 CommentsReport

மீண்டும் விஜய்யுடன் இணையும் மோகன் ராஜா..!!

‘வேலாயுதம்’ படத்தை அடுத்து மீண்டும் விஜய்யுடன் இணையவிருப்பதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துவருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் பரப்பரப்பாக நடைபெற்றுவருகிறது. இதை முடித்துவிட்டு அடுத்ததாக அமெரிக்கா செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டுவந்தது. இந்த நிலையில் மோகன் ராஜா அடுத்ததாக விஜய்யை இயக்கவிருப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

இதுகுறித்து கல்லூரி விழா ஒன்றில் பேசிய மோகன் ராஜா, “விஜய்யும் நானும் சமவயதை ஒத்தவர்கள். அவரைவிட நான் 22 நாள்கள் மூத்தவன். விஜய்யுடன் இணைந்து வேலாயுதம் படத்தை உருவாக்கியது அற்புதமான அனுபவம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றவிருக்கிறேன். இது விஜய்யின் 63ஆவது படமாகவோ அல்லது 64ஆவது படமாகவோ இருக்கும். இதற்கான திரைக்கதையை மிகுந்த கவனிப்போடு உருவாக்கிவருகிறேன். விரைவில் அறிவிப்பு வெளிவரும்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*