By February 27, 20180 CommentsReport

ஹாலிவுட் பாணியில் அதுல்யா படம்..!!

ஆறு குறும்படங்களை இணைத்து உருவான ஆறு அத்தியாயம் படத்தில், சித்திரம் கொல்லுதடி அத்தியாயத்தை இயக்கிய ஸ்ரீதர் வெங்கடேசன் அதுல்யாவைக் கதாநாயகியாகக் கொண்டு புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். திரைக்கதையில் ஹாலிவுட் கலைஞர் இணைந்து பணியாற்றியுள்ளார்.

காவ்யா புரொடக்‌ஷன்ஸ், சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. கதை திரைக்கதை வசனம், இயக்கம், தாயம் ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவராக ஸ்ரீதர் வெங்கடேசன் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்துக் கலைகளைப் பின்னணியாகக் கொண்டு முழுநீள த்ரில்லர் படமாக உருவாக்கியுள்ளார். தமிழ், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்தக் கதை குறித்த தேடல், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

சீமைத்துரை, நெடுநல்வாடை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இசையமைத்துள்ளார். மனோராஜா ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்ட்ரூஸ் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஹாலிவுட் படங்களில் திரைக்கதை ஆலோசகராகப் பணியாற்றும் மைக் வில்சனுடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கியுள்ளனர்.

மதுரை, திருவண்ணாமலை, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இறுதிக் கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*