By February 27, 20180 CommentsReport

மீண்டும் இணையும் அபிஷேக் -ஐஸ்வர்யா ஜோடி..!!

கணவன், மனைவியான அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் மீண்டும் ஒருமுறை திரையுலகில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

முன்னதாக இந்தப் படத்தின் திரைக்கதை ஐஸ்வர்யாவுக்குப் பிடிக்காததால் படம் கைவிடப்பட்டதாக வதந்தி பரவியது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுமா அல்லது கைவிடப்படுமா என குழப்பம் நிலவிவந்த நிலையில் இருவரும் இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரிகளாக நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தனு வெட்ஸ் மனு, சிம்ரன் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த சாய்லேஷ் ஆர். சிங் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படம் குறித்து படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டெக்கான் கிரானிக்கிளுக்கு அளித்த பேட்டியில், “உத்தரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட காவல் துறை அதிகாரிகளாக இருவரும் நடிக்கவுள்ளனர். கணவன், மனைவியாகவே வருவதால் நிஜ ஜோடியைத் தேர்வு செய்துள்ளனர். படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.

குரு, தய் அக்‌ஷர் பிரேம் கே, குச் நா காஹோ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ள அபிஷேக்- ஐஸ்வர்யா ஜோடி, ராவண் படம் வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் இணைந்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*