By February 27, 20180 CommentsReport

தமிழ் சினிமா ஜனவரி மாத ரீலீஸ் இழப்பு என்ன?..!!

தமிழ் சினிமா 2018இல் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பு வருடத் தொடக்கத்தில் ஏற்பட்டது. பிப்ரவரி மாதம் முடிய உள்ள நேரத்தில் எட்டு வாரங்களில் 35 தமிழ் படங்கள் தமிழகத்தில் ரீலீஸ் ஆகியுள்ளன. ஜனவரி மாதத்தில் மட்டும் 14 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாயின. இதில் பிரபுதேவா நடித்த குலேபகாவலி10 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டது. விக்ரம் நடித்த ஸ்கெட்ச் 20 கோடி பட்ஜெட். சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் 55 கோடியில் தயாரானது. இப்படங்கள் பொங்கல் போட்டியில் ரீலீஸ் ஆயின. இதில் தானா சேர்ந்த கூட்டம் சுமார் 48 கோடி மொத்த வசூல். ஸ்கெட்ச் 20 கோடி, குலேபகாவலி சுமார் 3 கோடி மொத்த வசூல். ஆக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று படங்களும் லாபத்தைத் தரவில்லை.

மாத இறுதியில் வெளியான பாகமதி, மன்னர் வகையறா, நிமிர் ஆகிய மூன்று படங்களும் முதல் மூன்று நாட்களில் முடிந்துபோயின. எஞ்சிய சிறு பட்ஜெட் படங்கள் முதல் மூன்று நாட்கள் தியேட்டரில் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறின. 14 படங்களில் மொத்தமாகச் சுமார் 150 கோடி வரை முதலீடு செய்யப்பட்டிருக்கும். இதில் தியேட்டர்களில் திரையிட்டதன் மூலம் சுமார் 65 கோடி மட்டுமே வருவாயாகக் கிடைத்துள்ளது. தொலைக்காட்சி, இதர உரிமைகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலமாக 50 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு வருவாய் கிடைத்திருக்கலாம். மொத்தத்தில் ஜனவரி தமிழ் சினிமாவுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளது.

ரீலீஸ் படங்கள் பட்டியல்: 1. டிசம்பர்-13, 2. ஓநாய்கள் ஜாக்கிரதை, 3. பார்க்க தோணுதே 4. சாவி, 5.விதிமதி உல்டா 6. குலேபகாவலி, 7. ஸ்கெட்ச் 8. தானா சேர்ந்த கூட்டம் 9. சமூக வலைதளம்., 10, வீரதேவன் 11.பாகமதி12. மன்னர் வகையறா 13. நிமிர்14. சரணாலயம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*