By February 28, 20180 CommentsReport

பாலிவுட்டை மையமிட்ட தப்ஸி..!!

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இணைந்துவிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் தப்ஸி பன்னு.

வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘ஆடுகளம்’ படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தப்ஸி , அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தார். தமிழைப்போலவே தெலுங்கிலும் தொடர்ச்சியாக நடித்துவந்த அவர், ஷாஸ்மீ புத்தூர் படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் ஒன்றிரண்டு படங்களில் நடித்த தப்ஸிக்கு பிங்க் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

அதைத் தொடர்ந்து இந்தியில் கவனம் செலுத்த தொடங்கிய தப்ஸி ‘ரன்னிங் சாதி டாட்காம்’, ‘நாம் ஷபானா’, ‘ஜாத்வா 2’ என அடுத்தடுத்து நடித்தார். இந்தப் படங்களின் வெற்றியால் அங்கு அவருக்குப் பட வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன.

‘தில் ஜூங்ளி’, ‘தட்கா’, ‘முல்க்’, ‘மன்மர்சியான்’, ‘சூர்மா’ என இந்த ஆண்டு தப்ஸி கைவசம் ஐந்து படங்கள் உள்ளன. இந்தப் படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பு பெறும் பட்சத்தில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக தப்ஸி வலம்வர வாய்ப்புள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*