By March 1, 20180 CommentsReport

ரஜினிகாந்த்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் அனிருத் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். அதேநேரத்தில் ரஜினியின் ‘2.0’ படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில், ரஜினிய அரசியல் அறிவிப்புக்கு நடுவே, அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. அதன்படி ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக சில தகவல்கள் உலா வரும் நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு முதன்முதலாக அனிருத்துக்கு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*