By March 2, 20180 CommentsReport

பேய் பசிக்குக் குரல் கொடுத்த விஜய் சேதுபதி..!!

இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவி நயம் இயக்கத்தில் தற்போது த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் படம் ‘பேய் பசி’. இந்தப் படத்தில் நாயகனாக ஹரி பிரசாத் பாஸ்கர் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா நடித்துள்ளார். இவர்களுடன் விபின், நமீதா, டேனியல், பகவதி பெருமாள், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நடக்கும் திகில் கதையாக உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இவருடைய இசையில் நடிகர் விஜய் சேதுபதி பாடுவது இதுவே முதன் முறையாகும். ஒரே இடத்தில் நடக்கும் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இவருடைய இசையில் விஜய் சேதுபதி பாடலைப் பாடியிருப்பது இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தை ரெஸ்ட் ஈஸ்ட் கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரித்து வருகிறார். முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. இதனை அடுத்து விரைவில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை போன்றவை வெளியாக உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*