By March 2, 20180 CommentsReport

ஸ்ரீதேவியின் வாழ்வுக்கு நன்றி: ஷாருக் கான் நெகிழ்ச்சி..!!

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன் வந்து பார்த்தார் ஷாருக் கான். ஸ்ரீதேவி இறந்த போது அது குறித்து எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு திரும்பிய ஷாருக் கான், ஸ்ரீதேவி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“உங்கள் வாழ்வின் ஏதோ ஒரு சிறு பகுதியாக மாறி, உங்கள் வாழ்வை மேலும் அழகாக்கிய ஒரு வாழ்க்கை குறித்து அன்பும் நன்றியறிதலும் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்? அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையின் மீது அன்பு செலுத்துவதும், அந்த வாழ்க்கை முடிவுக்கு வரும்போதும் அதை மெச்சி நன்றி பாராட்டுவதும் எளிது அல்லவா…” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீதேவி கடைசியாக நடித்த படம் ஷாருக் கான் நடிப்பில் வெளிவரவுள்ள ஜீரோ படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*