By March 2, 20180 CommentsReport

பிரியங்கா படத்தை வெளியிடும் வெற்றிமாறன்..!!

மிக மிக அவசரம் படத்தை கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பில் வெளியிட உள்ளார் இயக்குநர் வெற்றி மாறன்.

ஸ்கெட்ச், கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. இந்தப் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக அமைதிப்படை 2, கங்காரு போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு புதியகீதை, ராமன் தேடிய சீதை போன்ற படங்களின் இயக்குநர் ஜெகன்நாதன் கதை எழுதியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சீமான் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்துள்ளார். ஆரிஸ் குமார், முத்துராமன், லிங்கா, ‘ஆண்டவன்கட்டளை’ அரவிந்த், வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி, ராமதாஸ், சரவண சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களின் பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை ஸ்ரீபிரியங்கா காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் தனது சொந்த நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பில் இந்த படத்தை வெளியிட உள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை ரெஸ்ட் ஈஸ்ட் கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரித்து வருகிறார். முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. இதனை அடுத்து விரைவில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை போன்றவை வெளியாக உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*