By March 2, 20180 CommentsReport

கர்நாடகாவில் மணிரத்னம் பெறும் விருது..!!

இயக்குநர் மணிரத்னத்துக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி சிறப்பித்திருக்கிறது கர்நாடக அரசு.

பெங்களூரில் நடைபெற்றுவரும் பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய அம்சமாக, இந்த வருடம் முதல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். கன்னட சினிமாவை நோக்கி மற்ற திரையுலகக் கலைஞர்களின் கவனத்தைத் திருப்புவதற்கான சிறந்த முடிவாக இதைப் பார்க்கலாம். கர்நாடக அரசின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதை கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக கவர்னர் வஜுபாய் ருதபாய் வாலா ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர்.

பத்து லட்ச ரூபாய் பணமுடிப்பு மற்றும் நினைவுச் சின்னம் ஆகியவற்றை விதானசௌதாவில் நடைபெறும் பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் மணிரத்னம் பெறுகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*