By March 2, 20180 CommentsReport

தள்ளிப்போனது காலா: வில்லன் ஆனாரா விஷால்..!!

மார்ச் 1ஆம் தேதியான இன்றிலிருந்து எந்தத் திரைப்படங்களையும் ரிலீஸ் செய்வதில்லை என்ற முடிவில் கறாராகத் தங்களது வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக்கிறது விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்தப் போராட்டத்தை முதலாவதாகச் சந்திக்கும் படம் காலா. வேலை நிறுத்தத்துக்கும், டீசர் ரிலீஸுக்கும் என்ன தொடர்பு என்றுதான் முதலில் யோசிக்கப்பட்டது. ஆனால், தயாரிப்பாளர்கள் சங்க அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு செய்தியினால் காலா டீசர் மீண்டும் தள்ளிப்போகுமா என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

புதிய படங்களின் ரிலீஸை நிறுத்துவது தொடர்பாக அரசுக்குத் தெரிவிப்பதுடன், இந்தப் பிரச்சினையில் அரசு தலையிட்டு முடித்துக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டு கடிதம் எழுதப்போவதை அடுத்த கட்ட முயற்சியாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் கையிலெடுத்திருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரியும் சங்கங்களில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மட்டுமே, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இம்முயற்சிக்கு இதுவரை ஆதரவளிக்கவில்லை. டிஜிட்டல் சேவை வழங்குனர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாலும், அவர்கள் தரப்பில் எவ்வித முயற்சியும் எடுக்காததாலும் இனி டிஜிட்டல் சேவை வழங்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று முடிவெடுத்திருக்கும் அதேசமயம்; தமிழக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் குழு ஒன்றை அமைக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எவ்விதத்திலும் சினிமா வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். திரைப்பட வெளியீடு விளம்பரங்கள், டீசர் ரிலீஸ், இசை வெளியீடு போன்ற நிகழ்வுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே, டீசர் ரிலீஸ் ஏற்பாடுகள் தவிர்த்து தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசி அவர்கள் சொல்வதுபடி திரைப்படத்தின் டீசர் விளம்பரம் மற்றும் டீசர் ரிலீஸ் ஆகியவற்றை புதிய வகையில் திரையிடும் வேலை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸுக்குப் புதிதாகச் சேர்ந்திருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*