By March 3, 20180 CommentsReport

தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு..!!

மெலடி இயக்குநர் என்று பெயர்பெற்ற இயக்குநர்களின் பட்டியலில் இருப்பவர் இயக்குநர் விஜய். கரு படத்துக்கு சாம் CS இசையமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டபோது ஆச்சர்யம் ஏற்பட்டது அவரது ரசிகர்களுக்கு. மிகவும் அழுத்தமாக, ராவான எனெர்ஜிடிக் பாடல்களை உருவாக்கும் சாம் CS மற்றும் அவருக்கு நேர் எதிரான இசைப் பரிச்சயம் கொண்ட விஜய்க்கும் எப்படி செட் ஆகும் என்ற கேள்வியே, அந்த ஆச்சர்யத்துக்குக் காரணம். ஆனால் அந்தக் கேள்விகளையெல்லாம் உடைத்து மிகவும் மென்மையான பாடல்களை சாம் CS மூலம் கரு படத்தில் கொடுத்திருக்கிறார் விஜய்.

சாம் CS பற்றி இயக்குநர் விஜய் ”சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS. கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாகப் புரிந்துகொண்டு அசத்துபவர் அவர். இந்தப் படத்தின் அவரது பாடல்கள், எனது எல்லா படங்களின் மிகச் சிறந்த பாடல்கள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும். கரு படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்திருக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்தேன். இந்தப் பாடல்களைப் போலவே கரு படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என உறுதியாகக் கூறுவேன்” என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*