By March 3, 20180 CommentsReport

ஏலத்துக்கு வரும் ஸ்ரீதேவி வரைந்த ஓவியம்..!!

நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியத்தை துபாயில் உள்ள தொண்டு நிறுவனத்தினர் ஏலம் விட ஏற்பாடு செய்துள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி 50 ஆண்டுகள் திரையுலகில் இருந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுகமான காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெயரும் அவருக்கு இருக்கிறது.

தமிழ் சினிமாவிலிருந்து இந்தி சினிமா உலகிற்குச் சென்றவர் அங்கும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி முன்னணி நடிகையானார். பிறகு தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்து மும்பையில் குடியேறினார். ஸ்ரீதேவி மறைந்த பிறகு அவரைப் பற்றிய பல புதிய தகவல்கள் தற்போது வெளியாகிவருகின்றன.

ஸ்ரீதேவி வெளிப்படையாகச் சொல்லாமல் நிறைய பேருக்கு உதவிகள் செய்ததாகவும், மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவியதாகவும் இணையதளங்களில் பலரும் கருத்துகள் பதிவிட்டுவருகிறார்கள். அதுமட்டுமின்றி ஓவியம் வரைவதிலும் ஸ்ரீதேவிக்கு ஈடுபாடு இருந்துள்ளது. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது இயற்கைக் காட்சிகள், தலைவர்கள் மற்றும் பெண்கள் படங்களை ஓவியமாகத் தீட்டிவைத்துள்ளார்.

ஸ்ரீதேவி தான் வரைந்த பெண் ஓவியம் ஒன்றைத் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு முன்பு வழங்கியிருக்கிறார். அந்த ஓவியத்தைத் துபாயில் ஏலம் விட தொண்டு நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஏலத்துக்கு வரவிருக்கும் அந்த ஓவியம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*