By March 4, 20180 CommentsReport

விஜய்க்கு எதிராக மூன்று வில்லன்கள்..!!

விஜய் 62 படத்தில் ராதாரவியும் பழ.கருப்பையாவும் வில்லன்களாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை தொடர்ந்து கொல்கத்தாவிலும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நடைபெற்ற படபிடிப்பில் விஜய் கருப்பு நிற கோர்ட் ஷூட் போட்டு கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. இதையடுத்து இன்று சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்தப் படத்தில் கதாநாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸும் விஜய்யும் இணையும் மூன்றாவது படமான இதில் சண்டைக் காட்சிகளைப் பிரபல தெலுங்கு இரட்டை ஸ்டன்ட் மாஸ்டர்களான ராம் – லக்‌ஷ்மன் அமைத்துவருகிறார்கள்.

விஜய் மல்டி மில்லியனராக நடிப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்தில் வில்லன்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா ஆகியோர் நடிக்க இருப்பதாக பிஹைண்ட் வுட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ள 3ஆவது நபரை ஒப்பந்தம் செய்திட படக்குழு தீவிரம் காட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.


Post a Comment

CAPTCHA
Refresh

*