By March 4, 20180 CommentsReport

மாஸ் லுக்கில் வலம்வரும் விஜய்..!!

விஜய் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்ததையடுத்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு, படத்தின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது.

துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துவருகிறார் விஜய். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. அதன் பின்னர், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் விஜய் கறுப்பு நிற கோர்ட் ஷூட் போட்டு, கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்தப் படப்பிடிப்பின்போது விஜய்யைச் சந்தித்துள்ளார் சன் டிவி ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற விஜே மணிமேகலை. அப்போது, ‘ஷோஸ் எல்லாம் சூப்பரா பண்றீங்க’ என்று விஜய் மணிமேகலைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் பாராட்டால் மகிழ்ச்சியடைந்த மணிமேகலை இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “படப்பிடிப்பின் இடையில் என்னிடம் விஜய் கைக்கொடுத்த தருணம் மிகவும் மகிழ்ச்சியான தருணம். அதுமட்டுமின்றி, ஷோஸ் எல்லாம் சூப்பரா பண்றீங்க என்று அவரிடமிருந்து கிடைத்த பாராட்டு, எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு. விஜய் அண்ணாவுக்கு எனது நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*