By March 4, 20180 CommentsReport

நடிகர்கள் அரசியல் என்ட்ரி: கலாய்க்கும் சத்யராஜ்..!!

நடிகர்கள் அரசியலுக்கு வந்து தோற்க வேண்டும் என சத்யராஜ் கடந்த மாதம் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது நடிகர் ஒருவர் அரசியலுக்கு வரும் காமெடி கதையில் அவர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் அன்றாடச் செய்திகளாக வலம்வரும் நிலையில் இதை காமெடியுடன் விமர்சிக்கும் படத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார். அடிதடி, கிரிவலம் போன்ற படங்களை இயக்கிய ஷிவ்ராஜ் இயக்கவுள்ளார். படம் குறித்து இயக்குநர், டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “நடிகர்கள் கட்சி தொடங்கி களத்தில் இறங்கிவருகின்றனர். இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி நமக்குத் தெரியாது. இது பற்றி யோசிக்கும் போதுதான் இந்தப் படத்திற்கான கரு கிடைத்தது. உடனே இந்தப் படத்தை சத்யராஜ் சாரை வைத்து இயக்க எண்ணினேன்” என்று கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவான நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே ஆகிய படங்களை இயக்கிய செல்வபாரதி கதை மற்றும் வசனம் எழுதுகிறார். ஷிவ் ராஜ் தற்போது திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார். ‘சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’ என்ற பெயரை அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். “சத்யராஜ் சார் இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு, திரைக்கதைப் பணிகளை முடித்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்” என ஷிவ்ராஜ் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். எம்.ஞானசுந்தரி இப்படத்தைத் தயாரிக்கிறார்.

“ஏப்ரல் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளோம். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படத்தை உருவாக்கவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*