By March 4, 20180 CommentsReport

டீசர் ஹிட்: விஜய்யை நெருங்க முடியாத ரஜினி..!!

தமிழ் சினிமாவில் வியாபாரம், வசூல் முக்கியத்துவம் உள்ள முதல் 3 நடிகர்கள் என ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரை மட்டுமே சொல்ல முடியும். மற்ற நடிகர்களின் வியாபாரம், வசூல் ஸ்திரமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிட்ட மூன்று நடிகர்களின் டீசர்கள், ட்ரெய்லர்கள் எது வந்தாலும் அவை யூ ட்யூபில் குறுகிய நேரத்தில் லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் நேற்று வெளியான ‘காலா’ டீசர் பெரும் சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நள்ளிரவில் திடீரென வெளியானதால் ‘மெர்சல்’ சாதனையை முறியடித்து ‘காலா’ டீசரால் ஒரே நாளில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேற முடியவில்லை. 24 மணி நேர முடிவில் காலா டீசர் 87 லட்சம் பார்வைகளையும், 3,29,000 லைக்குகளையும் பெற்றுள்ளது.

லைக்குகளின் எண்ணிக்கையில் அது ‘மெர்சல்’ டீசரின் பாதி அளவிற்குதான் பெற்றிருக்கிறது. பார்வைகள் எண்ணிக்கையில் 25 லட்சம் பார்வைகள் பின்தங்கிவிட்டது. பகலில் ‘காலா’ டீசரை வெளியிட்டிருந்தால் அது ‘மெர்சல்’ டீசரின் சாதனையை முறியடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

24 மணி நேரத்தில் சாதனை புரிந்த தமிழ் படங்களின் டீசர்கள் விவரம்

பார்வைகள்

மெர்சல் – 1 கோடியே 12 லட்சம்

காலா – 87 லட்சம்

விவேகம் – 61 லட்சம்

கபாலி – 51 லட்சம்

தானா சேர்ந்த கூட்டம் – 41 லட்சம்

லைக்குகள்

மெர்சல் – 72,8,000

காலா – 3,29,000

தானா சேர்ந்த கூட்டம் – 3,08,000

விவேகம் – 2,85,000

கபாலி – 2,32,000


Post a Comment

CAPTCHA
Refresh

*