By March 4, 20180 CommentsReport

கார்த்தி – ரகுல்: தொடரும் கூட்டணி..!!

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் அடுத்த படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.

பாண்டி ராஜ் இயக்கத்தில் கார்த்தி தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன், இயக்குநர் ஆர்.கண்ணன் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , ஆர்.ஜே. விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா உள்பட பலர் நடிக்கவுள்ளனர். கார்த்திக் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முதன் முறையாக கார்த்தி நடிக்கும் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். கபிலன், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.

பிரம்மண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் 15 நாட்களும், ஹைதராபாத், மும்பை, இமயமலை ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*