By March 4, 20180 CommentsReport

முடங்கிய தமிழ் சினிமா..!!

தமிழகத்திதில் சுமார் 1100 திரைகள் படங்களை திரையிட்டு வருகின்றன. இதில் 800 திரைகள் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில படங்களை ரிலீஸ் செய்து வருகின்றன. பிற திரைகளில் ஷிப்டிங் அடிப்படையில் படங்கள் திரையிடப்படும். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1 முதல் புதிய படங்களை வெளியிடுவது இல்லை என்ற முடிவை அமுல்படுத்தி உள்ளது.

தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிட்டு வரும் UFO, கியூப் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய படங்களை ரிலீஸ் செய்யாததால் திரையரங்குகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் தாங்காமல் நகர்ப்புறங்களில் குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில் காதல் ஜோடிகள் , குடும்பங்கள் குவியும்.

ஷாப்பிங் மால்கள் உள்ளே திரையரங்குகள் இருப்பதால் புதியபடம் என்றால் மட்டுமே குடும்பங்கள் காதல் ஜோடிகள் தியேட்டருக்குள் வருகின்றனர். ஷாப்பிங் மால் ACஎன்பதால் தியேட்டருக்குள் வரும் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது என்கிறார் சென்னை நகர விநியோகஸ்தர் செல்வம்.

புறநகர் பகுதிகளில் உள்ள காம்ப்ளக்ஸ், தனித் தியேட்டர்கள் காத்தாடி வருகின்றன. நேற்று பிற்பகல் முதல் பெரும்பான்மையான தியேட்டர்களில் பார்வையாளர் வருகையின்மைமையால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் உள்ள 1100 திரைகளில் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச வியாபாரம் 6 கோடி வரை நடைபெறும். இதுவே புதிய படங்கள் என்றால் 15 கோடி வியாபாரம் நடைபெறும். தியேட்டர்களை ஒட்டியுள்ள சிறு கடை வியாபாரிகள் நேற்றும் இன்றும் மிகவும் பாதிகப்பட்டுள்ளளனர். சனி ஞாயிற்று கிழமைகளில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படங்களை திரையிட கடும் போட்டி நிலவுகிறது. இப்படங்களை திரையிட டிஜிட்டல் கட்டணம் மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய படங்கள் திரையிட கால தாமதமானால் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் மட்டும் தியேட்டரை நடத்திவிட்டு பிற நாட்களில் மூடிவிடலாமா என்ற ஆலோசனையில் புற நகர் தியேட்டர் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*