By March 5, 20180 CommentsReport

என்னை சுற்றி நல்லவர்களே இருக்கிறார்கள் – ரகுல் பிரீத்சிங்..!!

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். தமிழிலும் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சினிமா உலகம் குறித்து ரகுல் பிரீத்திசிங் அளித்த பேட்டி…

“ நான் தற்போது தெலுங்கு பெண்ணாகிவிட்டேன். மும்பையில் இருந்தாலும் நான் தெலுங்கில் தான் அதிகம் பேசுகிறேன். இது எனது ஐதராபாத் நண்பர்களுக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

நான் இயல்பாகவே கடுமையாக உழைப்பேன். எங்கு வேலை செய்கிறேனோ அவர்கள் பேசும் மொழியை கற்பது எனது கடமை. தெலுங்கு பட உலகில் பணியாற்ற தொடங்கியதும் அந்த மொழியை கற்க தொடங்கிவிட்டேன். நான் ஒரு தென்இந்திய நடிகை. வடக்கில் இருந்து வந்ததாக சிலர் கூறுவது வேதனையாக உள்ளது. தெலுங்கில் பேசுவதையே அதிகம் விரும்புகிறேன்.

நாட்டில் நடக்கும் பலாத்கார சம்பவங்களை மறந்து விடுகிறார்கள். படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி பேசுகிறார்கள். இதற்கு காரணம் இதில் மசாலா இருக்கிறது. இது ஆண் ஆதிக்கம் மிக்க உலகம். இயற்கையாகவே மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள்.

நான் 20 படங்களில் நடித்து விட்டேன். இதுவரை என்னை யாரும் தவறான நோக்கத்தில் அழைத்தது இல்லை. என்னை சுற்றி நல்லவர்களே இருக்கிறார்கள். திரை உலகில் திறமை இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்”. என்றார். #RakulPreetSingh


Post a Comment

CAPTCHA
Refresh

*