By March 8, 20180 CommentsReport

7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மம்தா மோகன்தாஸ்..!!

விஜயகாந்த் நடிப்பில் 80களில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஊமை விழிகள்’. இது நடிப்பு பயிற்சி கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட படம்.

இதே தலைப்பில் மீண்டும் தமிழில் படம் உருவாகிறது. இந்த படம் ‘ஊமை விழிகள்’ படத்தின் தொடர்ச்சி அல்ல. இது புதிய கதை. பிரபுதேவா இதில் நாயகனாக நடிக்கிறார். ஆகாஷ் சாம் என்பவர் இயக்கும் இந்த படத்தில் ‘சிவப்பதிகாரம்’, ‘தடையற தாக்க’ படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ், பிரபுதேவா ஜோடியாக நடிக்கிறார்.

‘தடையறதாக்க’ படத்துக்குப் பிறகு தமிழில் நடிக்க வந்திருக்கும் மம்தா மோகன்தாஸ் கூறும்போது…

“நான் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறேன். இளம் இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடன குரு பிரபுதேவா ஆகியோருடன் இணைவது மகிழ்ச்சி. இது 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் அல்ல. புதிய படம் இதன் மூலம் மீண்டும் எனது திரைப்பயணத்தை தொடர வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெறுகிறது.

தற்போது, பிரபுதேவா ‘மெர்க்குரி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படம் ஏப்ரல் 13-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*