By March 10, 20180 CommentsReport

ரீ ரிலீஸில் முந்தும் விஜய், அஜித் படங்கள்..!!

தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் இரண்டாவது வாரமாக புதிய படங்கள் வெளியாகவில்லை. இதனால் திரையரங்குகளில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டுவருகின்றன.

திரையரங்கில் டிஜிட்டல் முறையில் படங்களைத் திரையிடும் கியூப், யூ.எஃப்.ஒ உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து புதிய படங்கள் எதையும் வெளியிடவில்லை. இதனால் பழைய படங்கள் திரையரங்கில் வரிசைகட்டி சராசரியான வசூலை ஈட்டிவருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களின் பிரதான பொழுதுபோக்காக சினிமாவே உள்ள நிலையில் புதிய படம் வெளியாகாவிடினும் பழைய படங்களைப் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மெர்சல், தெறி, வேதாளம், விவேகம், சவரகத்தி, நாச்சியார், மேயாத மான், விக்ரம் வேதா, தரமணி, சிவலிங்கா, கருப்பன், யாழ், பத்மாவத், பாகமதி, பாட்ஷா, நினைத்தை முடிப்பவன் ஆகிய படங்கள் சென்னையில் திரையிடப்பட்டுவருகின்றன. மற்ற நகரங்களிலும் இந்தப் படங்களும் இன்னும் சில படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

அஜித்தின் வேதாளம் திரைப்படம் ஏற்கனவே சில திரையரங்குகளில் திரையிடப்பட்டுவரும் நிலையில் இன்று முதல் பிவிஆர் சினிமாஸிலும் உட்லேண்ட்ஸிலும் திரையிடப்படுகின்றன. இந்த வார இறுதி நாள்களில் விஜய்யின் தெறி, மெர்சல் ஆகிய இரு திரைப்படங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 400 திரைகளில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*