By March 10, 20180 CommentsReport

ஹாலிவுட் ரீமேக்கில் ரஹ்மான்..!!

ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரே நேரத்தில் பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் ஒப்புக்கொள்ளாமல் குறைவான படங்களுக்கு இசையமைத்து மனதில் நிற்கக்கூடிய இசையைத் தருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் தற்போது அவர் வசம் ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி இயக்கும் பியாண்ட் கிளௌட்ஸ், லீ மஸ்க், 2.0, 99 சாங்க்ஸ், மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம், ராஜிவ் மேனன் இயக்கும் சர்வம் தாள மயம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படம், லிட்டில் டிராகன், ஆடுஜீவதம் என பத்து படங்கள் உள்ளன.

ஜான் கிரீன் எழுதிய ‘தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’ நாவலைத் தழுவி அதே பெயரில் ஹாலிவுட்டில் 2014ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இப்படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, இந்தப் படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. இந்தப் படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முகேஷ் சப்ரா இயக்கவுள்ள இதனை ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள், பணியாற்றவிருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் மற்றும் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*