By March 10, 20180 CommentsReport

மதுரையை மையமிட்ட சமுத்திரக்கனி டீம்..!!

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகிவரும் நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 9) மதுரையில் துவங்கியுள்ளது.

இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாடோடிகள். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரித்துவருகிறார்.

சசிகுமார், அஞ்சலி, அதுல்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பரணி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்திருக்கின்றனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்துமுடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் துவங்கி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இது குறித்தான போஸ்டர் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.

11ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்படவிருக்கிறது. இதில் படத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும், ஏராளமான துணை நடிகர்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கிறார்


Post a Comment

CAPTCHA
Refresh

*