By March 11, 20180 CommentsReport

ஹன்சிகா: எடை குறைந்தது, ஆதரவும் குறைந்தது..!!

நடிகைகள் எடை குறைப்பது புதிதல்ல. ஆனால், அப்படிக் குறைக்கும்போது சில சமயம், அதுவரை அவர்களுக்கு ஆதரவளித்துவந்த கைகளே கண்ணைக் குத்தக் கிளம்புவதுதான் அவர்களுக்கு மிகப் பெரிய சோதனை. இப்போது இதில் சிக்கியிருப்பவர் நடிகை ஹன்சிகா. தப்பித்திருப்பவர் அஞ்சலி.

குலேபகாவலி திரைப்படம் முடிந்ததும் ஒரே சமயத்தில் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை, அதர்வாவின் திரைப்படம் என இரண்டு படங்களில் கமிட் ஆனார் ஹன்சிகா. இவற்றின் ஷூட்டிங் முடிவடையும் வரை பொறுத்திருங்கள் என அவரைத் தேடிவந்த தயாரிப்பாளர்களிடம் கூறியவர், அதன்பிறகு தொடர்பு எல்லைக்கு வெளியே. கியூட்டான மாடர்ன் பெண்ணாக உருவாக்கப்பட்ட கேரக்டர்கள் பலவற்றுக்கு ஹன்சிகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டும், அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் தவித்தது தமிழ் சினிமா. தெலுங்கிலும் இதே நிலைதான்.

ஆனால், இன்ஸ்டாகிராமில் மட்டும் பல நாடுகளிலிருந்து படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தன. அவற்றில் ஹன்சிகா கொஞ்சம் ஒல்லியான தோற்றத்துடன் தெரிந்தபோது, அவர் அணிந்திருந்த உடையே காரணமாகச் சொல்லப்பட்டது. அதையும் ரசிக்கத் தவறவில்லை, அவரது ரசிகர்கள். ஆனால், திடீரென கறுப்பு உடையில் அவர் வெளியிட்ட போட்டோ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சாதாரணத்துக்கும் குறைவான ஒல்லித் தோற்றத்துடன் ஹன்சிகா அமர்ந்திருக்கும் அந்த போட்டோ ரசிகர்களை மிகவும் வருத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த போட்டோவின் கமெண்டிலேயே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள்.

இதே போன்றதோர் அதிர்ச்சியைத்தான் நடிகை அஞ்சலியும் தனது ரசிகருக்குக் கொடுத்திருக்கிறார். நாடோடிகள் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள ட்விட்டரில் படங்களை வெளியிட்டது படக்குழு. திரையுலகில் அறிமுகமானபோது இருந்த உடலமைப்புக்கு அஞ்சலி மாறியிருப்பது அந்தப் படங்களில் தெளிவாகத் தெரிந்தது.

உடல் எடையை அதிகப்படுத்தியதற்காக ஒருகட்டத்தில் விமர்சிக்கப்பட்டவர் அஞ்சலி. சேட்டை முதற்கொண்டு, தரமணி வரையில் அஞ்சலியின் உடல் எடை ஒரே சீராக இருந்துவந்தது. இதனால்தான் அவருக்குத் திரைப்படங்கள் கிடைக்கவில்லை என்றும் ஒரு கட்டத்தில் சொல்லப்பட்டது. ஆனால், இறைவி திரைப்படத்தில் அஞ்சலி கேரக்டர் அதிகம் ரசிகர்களால் புகழப்பட்டதைப் பார்க்கும்போது, கேரக்டருக்குத் தேவையான விதத்தில் ஒரு நடிகை தன்னைத் தயார்படுத்திக்கொள்ளாதபோது மட்டுமே ரசிகர்கள் நடிகைகளின் உடல் எடையைக் கருத்தில் கொள்கிறார்கள் என்று சொல்லலாம்.

ஆக, எடையால் ஏற்படும் அதிருப்தியை நடிப்பின் மூலம் சரிக்கட்டி விடலாம். எனவே, ஹன்சிகா தனது நடிப்புத் திறமையின் மூலம் ரசிகர்களைத் திருப்திபடுத்திவிட்டால், இந்த அதிருப்தி அப்படியே இரண்டு மடங்கு ஆதரவாக மாறிவிடும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*