By March 11, 20180 CommentsReport

சீமராஜா: விடைபெற்ற சமந்தா..!!

சீமராஜா படத்தில் தனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகை சமந்தா தெரிவித்திருக்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் பலரும் சினிமா உலகிலிருந்து ஒதுங்கிகொள்ளும் வேளையில் நடிகை சமந்தா தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விஷாலின் இரும்புத்திரை, தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கும் சமந்தா, தற்போது யூ-டர்ன் படத்தின் தமிழ் ரீமேக், ரங்கஸ்தலம், நடிகையர் திலகம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துவந்த ‘சீமராஜா’ படத்தில் தனக்கான படப்பிடிப்பு சம்பந்தமான காட்சிகள் நிறைவடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், “சீமராஜா படத்தில் எனக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. 24 ஏஎம் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன், பொன்ராம் உள்ளிட்ட அற்புதமான இந்தக் கூட்டணிக்கு நன்றி. 2018 பொன்னான வருடம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சூரி, நெப்போலியன், சிம்ரன், லால் ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இதில் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*