By March 11, 20180 CommentsReport

விஜய் ரசிகராக ஜி.வி..!!

‘நாச்சியார்’ படத்தின் மூலம் மிகுந்த கவனிப்பைப் பெற்ற ஜி.வி.பிரகாஷ், தற்போது நடித்துவரும் ‘சர்வம் தாளமயம்’ படத்தில் விஜய் ரசிகராக நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறியப்பட்ட ஜி.வி.பிரகாஷ், இசையிலிருந்து நடிப்புக்குவந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதுவும் பாலாவின் நாச்சியார் படத்தில் இவர் ஏற்றிருந்த ‘காத்து’ கேரக்டர் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப் பிரபலங்களிடம் பாராட்டைப் பெற்றது. அதுமட்டுமல்லாது தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களை கையில் வைத்திருக்கும் நடிகராக வலம் வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் சர்வம் தாளமயம் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக ஜி.வி.பிரகாஷுக்கு இசையமைக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷ் விஜய் ரசிகராக நடித்துவருகிறார் எனத் தெரிகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை காசினோ திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இங்கு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக வெளியான வீடியோவில் ஜி.வி.பிரகாஷ் ஃபுல் எனர்ஜியுடன் டான்ஸ் ஆடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதேசமயம் தியேட்டர் முழுக்க மெர்சல் படத்தின் பேனர்கள் நிறைந்துள்ளன. இதில் இடம்பெற்றிருக்கும் பல பேனர்களில் ‘என்றும் தளபதிக்காக பீட்டர்’ என ஜி.வியின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, இந்தப் படத்தில் விஜய் ரசிகராக ஜி.வி.பிரகாஷ் நடித்திருப்பார் எனக் கருத முடிகிறது.

நிஜத்திலும் விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி.பிரகாஷ், படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*