By March 11, 20180 CommentsReport

முதல்வர் மனைவி கேரக்டரில் நயன்தாரா..!!

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் அவரது மனைவி வேடத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் நிலையில் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை ‘யாத்ரா’ என்ற தலைப்பில் மகி ராகவ் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே பாத்தஷலா, ஆனந்தோ பிரம்மா உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர். இதில் ஒய்.எஸ்.ஆர். வேடத்தில் மம்முட்டியும் அவரது மனைவி விஜயம்மாவாக நயன்தாராவும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மட்டுமல்லாமல் பல மொழிகளில் இந்தப் படம் தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆந்திராவில் மக்கள் செல்வாக்குள்ள அரசியல்வாதியாக உருவெடுத்த ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆட்சியில் இருக்கும்போது விமான விபத்தில் 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார். 1999 முதல் 2004ஆம் ஆண்டு காலத்தில் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் அதிகளவில் கவனம் செலுத்தப்படவுள்ளது. அதிலும் குறிப்பாக, அவரது வெற்றிக்குக் காரணமாக இருந்த மூன்று மாத கால நடை பயணம் திரைக்கதையில் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*