By March 13, 20180 CommentsReport

போனி கபூர் தயாரிப்பில் அஜித்..!!

விஸ்வாசம் படத்தையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவிருப்பதாகத் தகவல்
வெளியாகியுள்ளது.

அஜித்-சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம்
‘விஸ்வாசம்’. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். டி.இமான்
இசையமைக்கிறார். விவேகம் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சத்யஜோதி
ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு
ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில்
அஜித்தின் அடுத்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்
தயாரிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீதேவிக்கும் அஜித்துக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. அதனால்தான்
ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டதற்காக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெஸ்ட்
ரோலில் நடித்துக்கொடுத்தார் அஜித். அதே சமயம் ஷாலினிக்கு நன்கு பழக்கமான
நட்பு வட்டாரத்தில் ஸ்ரீதேவியும் இருந்திருக்கிறார். இதன் காரணமாக நேற்று
சென்னையில் நடைபெற்ற ஸ்ரீதேவியின் 16ஆம் நாள் சடங்கு நிகழ்ச்சியில்
அஜித், தனது மனைவி ஷாலினியுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் அஜித் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில்
நடிக்கவிருப்பதாகவும், அஜித்-வினோத் இணையும் இந்தப் படத்தை ஸ்ரீதேவியின்
கணவர் போனி கபூர் தயாரிக்கவிருப்பதாகவும் ‘SIFY’ இணையதளம் வெளியிட்ட
செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கியவர்
வினோத். மேலும் அரவிந்த் சாமி, த்ரிஷா நடித்துள்ள ‘சதுரங்க வேட்டை 2’
படத்தின் கதையையும் இவர்தான் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*