By March 16, 20180 CommentsReport

நடிகர்களிலேயே சிறந்தவர் பிரியங்கா..!!

‘குவாண்டிகோ’ படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் சென்று பிரியங்கா சோப்ராவை
வாழ்த்தியுள்ளார் பாலிவுட் நடிகர் அனுபம் கேர்.

அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் ஹாலிவுட் டிவி தொடரான ‘குவாண்டிகோ’
மூன்றாம் சீசனில் பிஸியாக நடித்துவருகிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா
சோப்ரா. ஆக்‌ஷன் கலந்த திரில்லர் தொடரான இதில் அலெக் பாரிஸ் என்ற
கேரக்டரில் நடிக்கிறார்.

இந்தத் தொடரில் நடித்துவருவதால் சமீப காலமாக அவர் நியூயார்க்கில்
இருந்துவருகிறார். இதன் காரணமாக பரேலி சர்வதேச பல்கலைக்கழகம் வழங்கும்
பட்டமளிப்பு விழாவில் தனக்கு கெளரவ விருது அளித்தபோது கூட அதில்
கலந்துகொள்ள முடியாமல் தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘குவாண்டிகோ’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பாலிவுட்
நடிகர் அனுபம் கேர், பிரியங்காவை சந்தித்துள்ளார். இதையடுத்து இருவரும்
எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “என் அன்புமிக்க பிரியங்காவுக்கு நன்றி. உங்களை நேரில் வந்து
சந்தித்த தருணம் மிகவும் அற்புதமானது. இந்திய நட்சத்திரமான உங்களை
நினைத்தும், நீங்கள் செய்துள்ள சாதனைகளை நினைத்தும் பெருமிதம்
கொள்கிறேன். இந்திய நடிகர்களிலேயே நீங்கள் சிறந்தவர், உலகளவில் நம் கொடி
தொடர்ந்து பறக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment