By March 17, 20180 CommentsReport

சிம்புவுக்கு யுவன் அளித்த பரிசு..!!

சிம்பு – யுவன் கூட்டணியில் ராஜா ரங்குஸ்கி படத்தில் உருவாகியிருக்கும்
‘நான் யாருன்னு தெரியுமா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.

சிம்பு – யுவன் காம்பினேஷன் என்றாலே ரசிகர்களிடம் எப்போதும்
எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில் ராஜா ரங்குஸ்கி
படத்துக்கு இவர்கள் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘நான் யாருன்னு
தெரியுமா’ பாடலுக்கும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தப் பாடலுக்கு
வரவேற்பு கிடைக்க காரணம். இந்தப் படத்தின் நாயகன் ‘மெட்ரோ’ சிரிஷின்
கதாபாத்திரத்துக்கு எழுதியதாக இருக்கும் இந்தப் பாடல் சிம்புவுக்கும்
பொருந்தும் விதமாக அமைந்திருப்பதுதான்.

ஈசன், கிடாரி, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களில்
750க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் மோகன் ராஜன் இந்தப் பாடலை
எழுதியுள்ளார். இத்தனை பாடல்கள் எழுதினாலும் யுவன் இசையில் முதன்முறையாக
இந்தப் படத்துக்குத்தான் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

இதுகுறித்து பாடலாசிரியர் மோகன் ராஜனிடம் தொடர்பு கொண்டு பேசிய போது,
“நான் முதன்முறையாக யுவன் சாருடன் இணைந்திருக்கும் படம் இது. நான்
யாருன்னு தெரியுமா பாடலுக்கு முன்பு இரண்டு பாடல்கள் இந்தப் படத்தில்
எழுதியிருக்கிறேன். இது மூன்றாவது பாடல். இந்தக் கதைக்குப் பொருந்தும்
விதமாகவும், அதே சமயம் சிம்பு அவர்களுக்கான பாடலாகவும் இது இருக்கும்.
அந்தப் பாடலை நீங்களே கேட்டு பாருங்கள்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பாடல் வரிகள்:

நான் யாருன்னு தெரியுமா?

என்னை ஜெயிச்சிட முடியுமா?

நான் கழுகுப் பார்வக்காரன்

உன்னை தொரத்தி தூக்கப் போறேன்

நான் பெரிய வேட்டைக்காரன்

குறி வெச்சி தாக்கப் போறேன்

தடுக்க முடியாது – என்னை

நிறுத்த முடியாது

பாக்க முடியாது – நீ

பதுங்க முடியாது

நான் யாருன்னு தெரியுமா?

என்னை ஜெயிச்சிட முடியுமா?

முடிஞ்சா ஓடு ஓடு ஓடு ஓடு மச்சி ஓடு

உன் தோல உரிக்கப் போறேன்

அதுல மால செய்ய போறேன்

உன்ன மேல அனுப்ப போறேன்

அந்த நாள குறிக்கப் போறேன்

ஓட ஓட ஓட முடியாது – நீ

தேட முடியாது

வளைக்க வளைக்க முடியாது – என்னை

அழிக்க முடியாது.

என சிம்பு குரலில் ஒலிக்கும் இந்த வரிகள் அனைத்தும் அவருக்கான பாடலாக
அமைந்திருக்கிறது. இந்தப் பாடல் சிம்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்
பெற்று வருகிறது.


Post a Comment