By March 18, 20180 CommentsReport

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குவது இவரா?..!!

சிவகார்த்திகேயன் தற்போது சீமராஜா படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் சமந்தா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. போராட்டம் முடிந்த பிறகு படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானி சம்பந்தப்பட்ட கதையிலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்க இருப்பதாகவும், அந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க இருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது விளக்கமோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*