By March 19, 20180 CommentsReport

அஞ்சலியின் ‘பேய்’ விருப்பம்..!!

‘ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பேய் படங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறது’ என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழி மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் அஞ்சலி. தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள ‘பேரன்பு’ படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாகவும், விஜய் ஆண்டனியுடன் ‘காளி’ படத்திலும், ‘நாடோடிகள் 2’ படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் அவர், சினிமா பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

“தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளேன். எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் அமைகின்றன. ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளும் கிடைக்கிறது. பேய் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

ஏற்கெனவே தெலுங்கில் வெளியான கீதாஞ்சலி என்ற பேய் படத்தில் நடித்து இருக்கிறார் அந்த அனுபவம் குறித்து பேசியவர், “அந்தப் படத்தில் எனக்கு இரண்டு வேடம். ஒரு கதாபாத்திரத்தில் பேயாக வந்து ரசிகர்களைப் பயமுறுத்தினேன். அந்தப் படம் நன்றாக ஓடியது. எனக்கு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது. இன்றைய தலைமுறையினர் திகில் படங்களைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.

தனக்கு நிறைய பேய் படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தவர், “கீதாஞ்சலி பேய் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி நடக்கிறது. அந்தப் படத்திலும் நான் பேயாக நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*