By March 19, 20180 CommentsReport

தமிழில் அறிமுகமாகும் அல்லு அர்ஜுன்..!!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் நடிகர் அல்லு அர்ஜுன்.

நடிகர்கள் தங்கள் மொழியில் நடிப்பதைத் தாண்டி பிற மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். அதேபோல் தங்களது படங்கள் பிற மாநிலங்களிலும் திரையிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் அல்லு அர்ஜுன் தற்போது தமிழில் ‘என் பெயர் சூர்யா… என் வீடு இந்தியா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

தன்னுடைய அதிரடி நடிப்பினாலும், நடனத் திறமையாலும் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் ஒரு ராணுவ வீரனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தில் சரத்குமார், அர்ஜுன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சாய்குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், பொம்மன் ஹிராணி, நதியா என முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

வி.வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் நாகபாபு மற்றும் பி.வாசு இணை தயாரிப்பில் ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, விஷால் – சேகர் என இரட்டையர் இசையமைக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment