By March 19, 20180 CommentsReport

அரசியல் சூழலைச் சொல்லும் ஒரு படம்..!!

நமது அரசியல் சூழலை நையாண்டித்தனமாகக் கையாளும் காமெடி படமாக உருவாகியுள்ளது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற திரைப்படம்.

குறும்படம் மற்றும் விளம்பரப் படங்களை இயக்கிவந்த அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’. இந்தப் படத்தில் ‘ராஜதந்திரம்’ படத்தின் மூலமாக அனைவரையும் கவர்ந்த வீரா கதாநாயகனாகவும், ‘குக்கூ’ மாளவிகா நாயர் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் நமது அரசியல் சூழலை நையாண்டித்தனமாகக் கையாளும் காமெடி படமாக உருவாகியுள்ளது. சுதர்ஷன் ஒளிப்பதிவில் பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் பசுபதி, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன் எனப் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அவுரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு நேற்றுடன் சென்னையில் நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்து இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் கூறும்போது, “ஒரு படத்தைக் கொடுத்த அவகாசத்தில், கொடுத்த பட்ஜெட்டில் முடித்துக் கொடுப்பதே ஓர் இயக்குநரின் முதல் சவாலாகும். இதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். என்மீது பெரிதளவு நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்த தயாரிப்பாளர் காவியா மகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இந்தப் படம் நிச்சயம் ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும் என உறுதியாகக் கூறுவேன்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Post a Comment