By March 19, 20180 CommentsReport

சீனாவில் கோடிகளைக் குவிக்கும் சல்மான் கான் படம்..!!

சல்மான் கான் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ திரைப்படம் இந்த மாதம் சீனாவில் வெளியாகி ரூ.200 கோடிவரை வசூல் ஈட்டியுள்ளது.

சீனாவில் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தின் வெற்றி குறித்து இராஸ் இன்டர்னேஷனல் நிறுவனத்தின் மக்கள்தொடர்பு இணைத் தலைவர் அமிதா நாயுடு பிடிஏக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். “படத்தின் கதையும் இயக்கமும் சீனாவின் ரசிகர்களை மகிழ்வித்ததோடு அவர்கள் மனதை தொடும்விதத்தில் அமைந்துள்ளது” என்று கூறியுள்ளதோடு சீனாவின் சந்தையை ஆராய திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“சீனாவின் சந்தை வாய்ப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து இராஸ் நிறுவனம் கபீர் கான் இயக்கும் மற்றொரு படத்தை வெளியிட உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆமிர் கானின் தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படங்கள் ஏற்கெனவே சீனாவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இதனால் மற்ற தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தை அங்கு திரையிட ஆர்வம் காட்டுகின்றனர்.

“உலகிலேயே அதிகமாக சீனா 41,000 திரைகளைக் கொண்டுள்ளது. மேலும் சமீபகாலமாக இந்திய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைவதைப் பார்க்கிறோம். சர்வதேச அளவில் இந்தியப் படங்களுக்கான சந்தையாகச் சீனா உள்ளது” என அமிதா தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*