By March 20, 20180 CommentsReport

எஸ்.துர்கா படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்களை தேடி அலையும் ரசிகர்கள்..!!

மலையாள பட டைரக்டர் சனல்குமார் சசிதரன். இவர் சமீபத்தில் செக்ஸி துர்கா என்ற மலையாள படத்தை இயக்கினார். இந்த படம் சர்வதேச பட விழாவில் திரையிட ஏற்பாடு செய்தார். ஆனால் படத்தின் பெயரால் சர்ச்சை கிளம்பியது.

மேலும் சென்சார்போர்டும் அனுமதிக்க மறுத்தது. இதன் காரணமாக சனல்குமார் சசிதரனின் படம் கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும், அதன் பிறகு கேரளாவில் நடந்த திரைப்பட விழாவிலும் திரையிடப்பட முடியாத நிலை ஏற்பட்டது.

அதன்பிறகு சனல்குமார் சசிதரன் படத்தின் பெயரை எஸ்.துர்கா என்று மாற்றியதன் மூலம் அவரது படத்துக்கு சென்சார்போர்டு அனுமதி வழங்கியது.

திரையிடுவதற்கான அனுமதி கிடைத்தாலும், இப்படத்தை வினியோகிக்க சிக்கல் கிளம்பியது. தியேட்டர் கிடைக்காமல் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் டைரக்டர் சனல்குமார் சசிதரன் திணறினார்.

இதையடுத்து டைரக்டர் சனல்குமார் சசிதரன் கேரள ஐகோர்ட்டை அணுகினார். எஸ்.துர்கா படத்தை வெளியிட ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து படத்தை வெளியிட டைரக்டர் சனல்குமார் சசிதரன் ஏற்பாடு செய்தார். ஆனால் முக்கிய தியேட்டர்களில் படத்தை வெளியிட தயக்கம் காட்டினார்கள்.

இந்த தகவல் டைரக்டர் சனல்குமார் சசிதரன் ரசிகர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் திரையுலகில் புது முயற்சியாக படத்தை வெளியிட தியேட்டர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 25-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இடம் பெற்றனர். இவர்கள் கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை உள்ள முக்கிய நகரங்களில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்களை அணுகி படத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

ரசிகர்கள் முயற்சியால் இதுவரை 20-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் எஸ்.துர்கா படத்தை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளனர். இது பற்றி டைரக்டர் சனல்குமார் சசிதரன் கூறும் போது, தியேட்டர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன், என்றார். இதன் மூலம் கேரளாவில் வருகிற 23-ந்தேதி எஸ்.துர்கா படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*