By March 21, 20180 CommentsReport

படப்பிடிப்பில் கலந்துகொண்ட நயன்தாரா..!!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் நடிகை நயன்தாரா.

தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தால், மார்ச் 16ஆம் தேதி முதல் தமிழ் சினிமா சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளும் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதுடன், உள்ளூர் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகள் சம்பந்தமான படப்பிடிப்புகளுக்கு 23ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமான நடிகர், நடிகைகள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அஜித்தின் விஸ்வாசம், கோலமாவு கோகிலா, சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படம் என ஒப்பந்தமான நயன்தாரா நடிக்க முடியாத நிலையில், தெலுங்கில் உருவாகிவரும் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ஹா ரெட்டி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடைபெற்றுவருகிறது.

சரித்திரப் படமாக உருவாகிவரும் இதில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘கொனிடேலா புரொடக்‌ஷன் கம்பெனி’ நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் பிரம்மாண்டமாகத் தயாரித்துவருகிறார்.


Post a Comment