By March 21, 20180 CommentsReport

நடிப்பிலும் கவனம் செலுத்தும் ‘ஹிப்ஹாப்’ ஆதி..!!

‘மீசைய முறுக்கு’ படம் தந்த வரவேற்பால் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, அடுத்த படத்துக்குத் தயாராகியுள்ளார்.

சுந்தர்.சியின் ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, பாடகர், பாடலாசிரியர் என வளர்ச்சியடைந்துடன் மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் வெற்றி கண்டிருக்கிறார். இதையடுத்து சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். ஹாக்கியை மையமாகக்கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் அவர் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிஹைண்ட் வுட்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை படங்களுக்கு எழுத்துப் பணிகளை மேற்கொண்ட ஆனந்த் அண்ணாமலை, ஆதியைக் கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்” என படக் குழுவினருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவுலகிலும் பிஸியாக இசையமைத்துவரும் ஆதி, தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*