By March 21, 20180 CommentsReport

விபத்தைச் சந்தித்த ஆலியா பட்..!!

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு வலது கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் தனது 25ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஆலியா பட், பல்கேரியாவில் நடைபெற்றுவரும் ‘பிரம்மஸ்த்ரா’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுவருகிறார். ரன்பிர் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். அயன் முகர்ஜி இயக்குகிறார். சண்டைக்காட்சியில் கலந்துகொண்ட ஆலியா பட்டுக்கு எதிர்பாராத விதமாக வலது கை மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது.

இந்த சம்பவம் குறித்து படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டிஎன்ஏவுக்கு அளித்த பேட்டியில், “ஆலியா பட்டுக்கு இரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது. அதிக வலி உள்ளது. கை முழுவதும் கட்டுப்போடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவரை 15 நாள்களுக்கு நன்றாக ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளார்கள்” என்று கூறினார்.

“பிரம்மஸ்த்ரா படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த மாத இறுதியில் படக்குழு நாடு திரும்ப இருந்தது. ஆலியா பட் விபத்தைச் சந்தித்திருப்பதால் தற்போது அவரால் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியாது. குளோசப் காட்சிகளை மட்டுமே படமாக்க முடியும். விரைவில் படக்குழு சரியான முடிவெடுக்கும்” எனவும் டிஎன்ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*