சிவகார்த்தி தயாரிப்பு: புது அப்டேட்..!!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் நண்பர் அருண்ராஜா காமராஜ். இவர் மகளிர் கிரிக்கெட்டை மையமாக வைத்து புதிய படமொன்றை இயக்குகிறார். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பூஜையும் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இதையடுத்து இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியில் தற்போது நிறைவடைந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அருண்ராஜா காமராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரமா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். மகளிர் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில் சிறிய நகரத்திலிருந்து கிரிக்கெட் கனவுகளுடன் வளரும் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் நடிப்பில் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.