மாதுரிக்கு நன்றி கூறிய ஜான்வி..!!
பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், நடிகை ஸ்ரீதேவிக்கு பதில் மாதுரி தீக்ஷித் நடிப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
கரண் ஜோஹர் தயாரிப்பில் பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன், தற்போது சித்தாத் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நடிக்கவிருந்தார்.
இதில் வருண் தவான், ஆலியா பட், சஞ்சய் தத், ஆதித்யா ராய் கபூர், சோனாக்ஷி சின்ஹா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தனர். ஆனால் திடீரென ஸ்ரீதேவி மரணமடைந்ததால் இந்தப் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதேவிக்கு பதிலாக நடிக்க மாதுரி தீக்ஷித் ஒப்பந்தமாகியுள்ளார்.
இது குறித்து நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், “என் அம்மாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமான இந்தப் படத்தில் அம்மாவிற்கு பதிலாக மாதுரி தீக்ஷித் நடிப்பதற்கு நானும், எனது தங்கை குஷி மற்றும் எனது தந்தை ஆகியோர் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.