By March 21, 20180 CommentsReport

பாலிவுட்டுக்குத் திரும்பிய பிரியங்கா..!!

ஹாலிவுட் திரையுலகில் பரபரப்பாக இயங்கிவந்த பிரியங்கா சோப்ரா தற்போது பாலிவுட்டில் சிறந்த திரைக்கதைகளை எதிர்பார்த்துள்ளார்.

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் பக்கம் சென்ற பிரியங்கா அங்கு முக்கியமான ஆளுமையாக உருவெடுத்துள்ளார். கால்ஷீட் பிரச்சினை காரணமாக சமீபகாலமாக இந்திப் படங்களில் அவரால் நடிக்க முடியவில்லை. ஞாயிறு இரவு இந்தியா திரும்பியுள்ள அவர் பாலிவுட்டில் நல்ல திரைக்கதைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் பல திரைக்கதைகளைப் படித்துவருவதாகவும் டெக்கான் கிரானிக்கிள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிப்புப் பணியோடு தனது தாயுடன் இணைந்து பர்பிள் பெபிள் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்புப் பணியிலும் ஈடுபட பிரியங்கா முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

பிரியங்கா இந்தி திரையுலகில் 2016ஆம் ஆண்டு பிரகாஷ் ஜாவின் இயக்கத்தில் வெளியான ஜெய் கங்காஜல் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் அவர் அடுத்து களமிறங்கும் இந்திப் படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

பிரியங்கா ‘லைக் ஏ கிட் லைக் ஏ ஜேக்’ என்ற ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஜிம் பேர்ஸன்ஸ், கிளைர் டேன்ஸ், ஆக்டேவியா ஸ்பென்ஸர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.


Post a Comment