By March 22, 20180 CommentsReport

சமந்தா படத்தில் நரேன்..!!

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ‘யு-டர்ன்’ திரைப்படத்தில் நரேன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஷாலின் ‘இரும்புத்திரை’, ராம்சரணின் ‘ரங்கஸ்தலம்’, சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’, விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’, சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநதி’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார் சமந்தா. அடுத்ததாகக் கன்னட ரீமேக் படமான ‘யு-டர்ன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ரங்கஸ்தலம் மற்றும் இரும்புத்திரை ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. இதையடுத்து கன்னட இயக்குநரும், நடிகருமான பவன்குமார் இயக்கத்தில் ‘யு-டர்ன்’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக ராகுல் ரவீந்திரனும், காவல் துறை அதிகாரியாக ஆதியும் நடித்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நரேன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மர்மமாக நடைபெறும் கொலைகளைத் துப்பறியும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தை சமந்தா ஏற்றிருக்கிறார். விதிமுறைகளை மீறி மேம்பாலத்தில் ‘யு-டர்ன்’ எடுக்கும் மனிதர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதன் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மத்தை ஆராயும் படமாக இது உருவாகி வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*