By March 23, 20180 CommentsReport

சாமி 2: மீண்டும் உருவாகும் நெல்லை டவுன்..!!

சாமி 2 படத்திற்காக அதன் முதல் பாக காட்சிகள் நடைபெற்ற இடங்கள் போல் அரங்கு அமைக்கவுள்ளனர்.

2003ஆம் ஆண்டு வெளியான சாமி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விக்ரமின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாக அந்தப் படம் அமைந்தது. த்ரிஷா கதாநாயகியாக நடித்த அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகளுக்குப் பின் உருவாகிவருகிறது. ஆனால் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, த்ரிஷா கதாநாயகியாக ஒப்பந்தமாகவில்லை. கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார்.

முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘திருநெல்வேலி அல்வா டா’ பாடல் காட்சி நெல்லை டவுன் தெருக்களைப் போன்று செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. அந்த தெருவை இரண்டாம் பாகத்திற்காக சில மாற்றங்கள் செய்து மீண்டும் செட் அமைக்கவுள்ளனர். ஒரு பாடல் மற்றும் சண்டைக்காட்சி அதில் படமாக்கப்படவுள்ளது. ஒரு வார காலத்தில் இந்த செட்டை உருவாக்கிவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது என படக் குழுவுக்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.

மேலும், “சில விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் டெல்லி, ஜெய்சால்மர், ஏற்காடு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மே மாதம் பாடல் காட்சி ஒன்று வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. இருமுகனில் இடம்பெற்ற ஹெலனா பாடல் போன்று அது உருவாகும்” என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*