By March 23, 20180 CommentsReport

விஷாலுக்கு ஜோடி ராஷி கண்ணா..!!

இரும்புத்திரை படத்தையடுத்து விஷால் நடிக்கவிருக்கும் ரீமேக் படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இரும்புத்திரை’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இதனையடுத்து தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் விஷால். இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். ‘விக்ரம் வேதா’ சாம் சிஎஸ் இசையமைக்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

2015ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தில் ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் நடித்திருந்தனர். பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்ததுடன் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழிலும் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் படம் சம்பந்தமான அறிவிப்புகள் வெளிவராத நிலையில், போராட்டம் முடிந்த பின்னர் இந்தப் படம் சம்பந்தமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*